புக்மார்க் டூல்பாரில் தேவையானவற்றை எளிதாக பயன்படுத்தி கொள்ள புக்மார்க் செய்வது வழக்கம். இந்த புக்மார்க் டூல்பாரில் ஃபோல்டர்களையும் உருவாக்கி வைத்து கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு குரோம் வெப் பிரவுசரில் எப்படி புக்மார்க் டூல்பாரில் ஃபோல்டர்களை உருவாக்குவது என்று பார்க்கலாம். வலது பக்கத்தில் செட்டிங்ஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த செட்டிங்ஸ் ஆப்ஷனை ரைட் க்ளிக் செய்ய வேண்டும். இதில் புக்மார்க் என்ற ஆப்ஷன் இருக்கும். இந்த ஆப்ஷனை க்ளிக் செய்தால் புக்மார்க் மேனேஜர் என்ற ஆப்ஷனையும் பார்க்கலாம்.
புக்மார்க் மேனேஜர் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் அதற்கென்று பிரத்தியேகமாக ஒரு டேப் திறக்கப்படும். இதில் புக்மார்க்ஸ் பார், அதர் புக்மார்க்பார்ஸ் போன்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் புக்மார்க்ஸ் பார் என்ற ஆப்ஷன் மேல் வைத்து மவுஸில் இருக்கும் வலது பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
இதில் ஏட் ஃபோல்டர் என்ற ஆப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கும். இதை க்ளிக் செய்தால் போதும். புதிய ஃபோல்டர் உருவாகிவிடும். இப்படி எளிதாக புக்மார்க் டூல்பாரில் ஃபோல்டர்களை உருவாக்கலாம்.
தினம் பயன்படுத்துகின்ற வெப் பிரவுசரில் நிறைய விஷங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கும். அப்படி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சின்ன விஷயங்களையும் நமது தமிழ் கிஸ்பாட்டில் பகிர்ந்து கொண்டு வருகிறோம்.
கணினி இணையங்களின் தகவல் கூடம்
Saturday, 15 September 2012
Tuesday, 11 September 2012
கம்ப்ரஸ்டு ஃபோல்டர் எப்படி உருவாக்குவது

கம்ப்ரஸ்டு ஃபோல்டர் எப்படி உருவாக்குவது என்பது பற்றி பார்க்கலாம். எந்த ஒரு தகவல்களையும், புகைப்படங்களையும் ஃபோல்டரில் போட்டு பாதுகாத்து வைத்து கொள்வது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அப்படி போல்டரில் இருக்கும் தகவல்களை, மெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்றால் இந்த கம்ப்ரஸ்டு (ஸிப்) ஃபோஸ்டர் தேவைப்படும்.
இது போல் ஃபோல்டரில் உள்ள தகவல்களை முதலில் ஸிப் ஃபோல்டருக்கு மாற்றி, அதன் பிறகு மெயில் மூலம் மற்றவர்களுக்கு அனுப்புவது மிக சிறந்தது. இப்படி கம்ப்ரஸ் ஃபோல்டர் மூலம் அனுப்பவதால், அதற்குள் இருக்கும் தகவல்களையும் மற்றும் புகைப்படங்களையும் சிந்தாமல், சிதறாமல் மற்றவர்களுடன் மெயில் மூலம் பரிமாறி கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு ஒரு ஃபோல்டரில் பத்து புகைப்படங்கள் இருக்கின்றன. இதை அப்படியே மெயில் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பினால், அதை டெஸ்க்டாப்பில் சேவ் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். காரணம்
ஒவ்வொரு புகைப்படமாக டவுன்லோட் செய்ய வேண்டும். ஏனெனில் இதில் உள்ள புகைப்படங்கள் தனித்தனியே சிதறியிருக்கும். இதுவே ஃபோல்டரில் உள்ள 10 புகைப்படங்களையும் முதலில் கம்ப்ரஸ் ஃபோல்டருக்கு மாற்றிய பின்பு, மற்றவர்களது மெயிலுக்கு அனுப்பினால், அதை டவுன்லோட் செய்வது எளிது.
காரணம், அந்த கம்ப்ரஸ் ஃபோல்டரை சில மணித் துளிகளில் நமது டெஸ்க்டாப்பில் சேவ் செய்யலாம். இதனால் 10 புகைப்படங்களும் சிந்தாமல், சிதறாமல் அந்த கம்ப்ரஸ்டு ஃபோல்டரின் உள்ளேயே இருக்கும்.
இதை செய்வது மிகவும் எளிது. ஒரு ஃபோல்டரின் மேல் மவுஸ் வைத்து ரைட் க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின் சென்ட் டூ என்பதை க்ளிக் செய்து, பின்னர் கம்ப்ரஸ்டு (ஸிப்) ஃபோல்டரை உருவாக்க வேண்டும். இப்படி செய்வதனால் ஃபோல்டரில் இருந்த அனைத்து விஷயங்களும், ஸிப் ஃபோல்டரில் மாற்றப்பட்டுவிடும்.
அதன் பிறகு கம்ப்ரஸ்டு ஃபோல்டரில் வைத்து ரைட் க்ளிக் செய்ய வேண்டும். எக்ஸ்ட்ராக்ட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, இந்த கம்ப்ரஸ்டு (ஸிப்டு) ஃபோல்டரை எளிதாக திறக்க முடியும். இது தான் கம்ப்ரஸ்டு ஃபோல்டரை உருவாக்கும் முறை.
Saturday, 8 September 2012
விண்டோஸ் 7 புதிய வசதிகள்
பின் அப் (Pin Up): நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டர்களை, டாஸ்க் பாரில் வைத்து இயக்க விண்டோஸ் 7 வழி கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் போல்டரில், மவுஸை வைத்து, ரைட் கிளிக் செய்து, அப்படியே டாஸ்க் பாருக்கு இழுத்து விட்டுவிடவும்.
அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இயக்கிக் கொண்டிருக்கையில், எளிதாக அதில் வேலை செய்திட, இன்னொரு விண்டோவிலும் அதே அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்க விரும்புவீர்கள். இதற்கு அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இடம் தருமானால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டாஸ்க் பாரில் உள்ள அந்த புரோகிராமின் ஐகானில் கிளிக் செய்தி டவும்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மூலம், மிகத் தெளிவான, துல்லியமான காட்சியைத் திரையில் பெறலாம். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் படங்களில் உள்ள நுண்ணிய தகவல்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, இந்த வசதி லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உதவியாய் இருக்கும். டெக்ஸ்ட் துல்லியமாகக் காட்டப்படவும், படங்கள் தெளிவாகத் தெரியவும் இரண்டு சிஸ்டம் பைல்கள் இதற்கு உதவுகின்றன. அவை cttune.exe (Clear Type Text Tuning) dccw.exe (Display Color Calibration): நேரடியாக இவற்றை இயக்கலாம்; அல்லது கண்ட்ரோல் பேனலில் இவற்றைக் காணலாம்.
டாஸ்க் பாரில் ஐகான்களை எந்த வரிசையில் அமைக்க வேண்டும் என விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு உதவிடுகிறது. அவற்றின் ஐகான் மீது, கர்சரைக் கொண்டு சென்று இழுத்து விடுவதன் மூலம் இதனை மேற்கொள்ள லாம். முதல் ஐந்து ஐகான்களில் உள்ள புரோகிராம்களை இயக்க, சில கீகளை அழுத்தி இயக்கநிலைக்குக் கொண்டு வரலாம். எடுத்துக்காட்டாக, முதலில் காணப்படும் ஐகானில் உள்ள புரோகிராமினை இயக்க, விண்டோஸ் கீ +1 அழுத்த வேண்டும். இரண்டாவது ஐகான் புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ+2 அழுத்த வேண்டும்.
டாஸ்க் பாரில் கவனம் செலுத்தி, அங்கு இயக்கத்தினை மேற்கொள்ள, விண்டோஸ் கீ + T அழுத்த வேண்டும். இப்போது டாஸ்க் பார் மெனு கிடைக்கும். பின்னர் அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தி, புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் போதும். இந்த விளைவிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்தினால் போதும்.
ஹெல்ப் டெஸ்க் எனப்படும் உதவிடும் குறிப்புகளை விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு கம்ப்யூட்டரிலேயே வழங்குகிறது. “fix” அல்லது “Troubleshoot” என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்தால், பலவகையான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் பிரிவுகள் காட்டப்படுகின்றன. இவற்றில் எந்த பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமோ, அந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, தீர்வைத் தெரிந்து கொள்ளலாம்.

Subscribe to:
Posts (Atom)